சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
x

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்


விருதுநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறாள். இவர் பள்ளியில் சேருவதற்கு முன்பாக ஒரு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த ஆலையில் வேலை பார்த்த 18 வயது வாலிபர் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி விடுமுறை நாட்களில் அந்த சிறுமியை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட சிறுமிக்கு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் பட்டாசு ஆலை தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story