குளியல் அறையில் புகுந்து 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி-தொழிலாளி போக்சோவில் கைது


குளியல் அறையில் புகுந்து 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி-தொழிலாளி போக்சோவில் கைது
x

குளியல் அறையில் குளித்த போது 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

குளியல் அறையில் குளித்த போது 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

8-ம் வகுப்பு மாணவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரின் பெற்றோர் வேறு, வேறு திருமணம் செய்து சென்றுவிட்டனர். இதனால் அந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் மூதாட்டி வெளியே சென்றுவிட்டார்.அப்போது தனியாக இருந்த சிறுமி வீட்டின் குளியலறையில் குளித்து கொண்டு இருந்தார்.

வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்டு அதேப்பகுதியை சேர்ந்த காளிமுத்து வீட்டுக்குள் புகுந்தார்.

தொழிலாளி கைது

மேலும் குளியலறையில் குளித்து கொண்டு இருந்த அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று, சிறுமியை மீட்டனர். மேலும் காளிமுத்துவை பிடிக்க முயன்றபோது அவர் தப்பிஓடினார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி, பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக காளிமுத்துவை போக்சோவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் அந்தப்பகுதியில் உள்ள மயானத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story