கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

ஓமலூர்:

ஓமலூர் அடுத்த செம்மாண்டப்பட்டி புது தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 43), கூலித்தொழிலாளி. இவருக்கு 3 மனைவிகள். இந்த நிலையில் ஜெயராமன் 3-வது மனைவி பர்விதா (38) என்பவருடன் வசித்து வந்தார். ஜெயராமனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். அப்போது அவர் இறந்து விடுகிறேன் என்று கூறி வீட்டின் உள்ளே சென்று கதவை பூட்டிக்கொள்வது வழக்கம்.

இதேபோல் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் மது போதையில் வீட்டுக்கு வந்த ஜெயராமன் வீட்டின் உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நீ்ண்டநேரமாக சத்தம் எதுவும் வரவில்லை என்பதால் பர்விதா கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு ஜெயராமன் தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஓமலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ெஜயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story