அண்ணனை கத்தியால் குத்திய தொழிலாளி சிறையில் அடைப்பு


அண்ணனை கத்தியால் குத்திய தொழிலாளி சிறையில் அடைப்பு
x

சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்கள் முருகானந்தம் (வயது 40), சத்தியமூர்த்தி (25). இதில், முருகானந்தம் சென்னையிலும், சத்தியமூர்த்தி துங்கபுரத்திலும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இந்தநிலையில் முருகானந்தம் சென்னையில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து உள்ளார். கடந்த 10-ந் தேதி அண்ணன்-தம்பி இடையே மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சத்தியமூர்த்தி தனது அண்ணன் முருகானந்தத்தை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 10 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story