லாரி மோதி தொழிலாளி பலி


லாரி மோதி தொழிலாளி பலி
x

மார்த்தாண்டம் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

கன்னியாகுமரி

குழித்துறை,

அழகியமண்டபம் அருகே உள்ள கல்லங்குழி பயிற்றல் காலவிளையை ேசர்ந்தவர் ஆரோன்மணி (வயது 60), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் குழித்துறையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளில் அழகியமண்டபம் நோக்கி புறப்பட்டார்.

மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயன்குழி பகுதியில் வந்த போது எதிரே ராஜாக்கமங்கலம் முருங்கவிளையை சேர்ந்த உதய மார்த்தாண்டம் (55) என்பவர் ஓட்டி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் ஆரோன்மணி சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த சமயத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின்பக்க சக்கரம் ஆரோன்மணி மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ஆரோன்மணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story