லாரி மோதி தொழிலாளி சாவு


லாரி மோதி தொழிலாளி சாவு
x

மயிலாடுதுறை அருகே லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தார்

மயிலாடுதுறை

சீர்காழி தாலுகா, பூம்புகார் பல்லவனம் பகுதியை சேர்ந்தவர் வசந்தராஜன். இவரது மகன் வசந்தன்(வயது 33). கூலித் தொழிலாளி. உடல்நலக்குறைவு காரணமாக வசந்தன் நேற்று முன்தினம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்று விட்டு அங்கிருந்து நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தருமபுரம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வசந்தன் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக வசந்தன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி வசந்தன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார், லாரி டிரைவரான கரூர் மாவட்டம் கோவிந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






Next Story