லாரி மோதி தொழிலாளி பலி


லாரி மோதி தொழிலாளி பலி
x

பணகுடியில் லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி உசேன் தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் சுடலை (வயது 26). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பணகுடி வடக்கு நான்கு வழிச்சாலை சர்வீஸ் ஸ்டேசன் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த முனியசாமி (35) என்பவரை கைது செய்தார்.


Next Story