மோட்டார் சைக்கிள்-லாரி மோதி தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள்-லாரி மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 11 May 2023 4:00 AM IST (Updated: 11 May 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்-லாரி மோதி தொழிலாளி பலியானார்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே இடையர்பாளையம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35), கூலித்தொழிலாளி. இவரது மகன் தனபால் பிரதீஸ் (11). இந்தநிலையில் நேற்று முன்தினம் சந்திரசேகர் தனது மகனுடன் பொன்னாகாணி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தனபால் பிரதீஸ் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். இதுகுறித்து சுல்தான்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் செந்தில்குமாரை கைது செய்தார். விபத்தில் மகன் கண் முன் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story