கூலித்தொழிலாளி தற்கொலை


கூலித்தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 18 Aug 2023 12:07 AM IST (Updated: 18 Aug 2023 12:28 AM IST)
t-max-icont-min-icon

கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் நந்தனார் தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (வயது 39), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஹரிபிரசாத், ஹரிஷத், ஈஸ்வர்த் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த இரும்பு பீரோவில் தன்னுடைய வலது கை முட்டியால் தனக்குத்தானே குத்திக்கொண்டதில் நரம்பு அறுந்து அதிக ரத்தம் வெளியேறியது. உடனே புண்ணியமூர்த்தியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story