விஷ வண்டு கடித்து கூலி தொழிலாளர்கள் படுகாயம்


விஷ வண்டு கடித்து கூலி தொழிலாளர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 22 Sept 2023 12:15 AM IST (Updated: 22 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே விஷ வண்டு கடித்து கூலி தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் உள்ள கன்னி வாய்க்காலில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி நடைபெற்றது. இப்பணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த வனமயில்(வயது 55), சந்திரன்(60), வாசுகி(50),லதா(48), சரஸ்வதி(60), கஸ்தூரி(60), ராஜமாணிக்கம்(60), கலாமதி(55), வடிவேல்(58), வசந்தா(55), பொன்னாச்சி(45), ஆகிய 11 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த மரத்திலிருந்து பலத்த சத்தத்துடன் பறந்து வந்த விஷ வண்டுகள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்களை தாக்கி கடித்துள்ளது. இதில் லேசான காயமடைந்த நான்கு பேர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். படுகாயம் அடைந்த ஏழு பேர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story