பொள்ளாச்சியில் தொழிலாளி மர்ம சாவு-மனைவி உள்பட 2 பேரிடம் விசாரணை


பொள்ளாச்சியில் தொழிலாளி மர்ம சாவு-மனைவி உள்பட 2 பேரிடம் விசாரணை
x

பொள்ளாச்சியில் கூலி தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக மனைவி உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் கூலி தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக மனைவி உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கூலி தொழிலாளி

பொள்ளாச்சி திலகர் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜமாணிக்கம் (44). இந்த நிலையில் ராஜாமணி வீட்டில் இருந்து சத்தம் போட்டுக் கொண்டு வெளியில் ஓடி வந்ததாக தெரிகிறது. அப்போது அவரிடம் அக்கம், பக்கத்தினர் விசாரித்த போது, தனது கணவர் வீட்டிற்கு அதிக குடிபோதையில் வந்ததாகவும், போதை தலைக்கேறிய நிலையில் சுவரில் மோதி இறந்து விட்டதாக கூறியதாக தெரிகிறது.

இதை கேட்ட அக்கம், பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது நாகராஜ் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இறந்த நாகராஜின் உடலில் காயம் இருந்ததால் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சம்பவத்தின் போது வீட்டில் இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் போலீசாரிடம் நாகராஜ் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சுவரில் தனக்கு தானே மோதிக் கொண்டார். இந்த நிலையில் தானும் குடித்து இருந்ததால் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறினார்.

இந்த நிலையில் இறந்த நாகராஜின் உடலில் தோல் பரலாக உரிந்ததும், நெற்றிலும், இடது கண்புருவத்திற்கு மேல் ரத்தகாயம் இருப்பதால் சந்தேகத்தின் பேரில மனைவி ராஜாமணி மற்றும் குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே நாகராஜ் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



Next Story