10 ரூபாய் கடனுக்காக தொழிலாளியின் மண்டை உடைப்பு
விழுப்புரத்தில் 10 ரூபாய் கடனுக்காக தொழிலாளியின் மண்டை உடைப்பு
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் சேகர். தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் சில நாட்களுக்கு முன்பு 100 ரூபாய் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதில் 90 ரூபாயை அவர் கிருஷ்ணனிடம் திருப்பி கொடுத்துவிட்ட நிலையில் 10 ரூபாய் மட்டும் பாக்கி இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சேகரிடம் 10 ரூபாய் பாக்கியை கேட்டு கிருஷ்ணன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் உருட்டு கட்டையால் சேகரின் மண்டையை உடைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சேகர் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணன் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story