தொழிலாளி கைது


தொழிலாளி கைது
x

அம்மாப்பேட்டை அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை ;

அம்மாப்பேட்டை அருகே குமிழக்குடி கிராமம், குடியான தெருவை சேர்ந்தவர் அசோக் குமார். விவசாயி, இவரது வயலில் குமிழக்குடியை சேர்ந்த சீனிவாசன் மகன் மாரிமுத்து (37) வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அசோக்குமார், மாரிமுத்துவை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து அசோக்குமாரின் மோட்டார் சைக்கிள் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி, அசோக்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அசோக் குமார் கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story