குளியலறையில் பிணமாக கிடந்த தொழிலாளி


குளியலறையில் பிணமாக கிடந்த தொழிலாளி
x

குளியலறையில் பிணமாக கிடந்த தொழிலாளி

திருப்பூர்

போடிப்பட்டி,

உடுமலை பகுதியில் வீட்டின் குளியலறையில் பிணமாக கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தொழிலாளி

உடுமலை தாராபுரம் ரோட்டை சேர்ந்தவர் சங்கர்லால் (வயது 43). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஒரு ஆண்டாக திருச்செந்தூர் அருகே உள்ள மனைவியின் சொந்த ஊரில் சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கு விஷயமாக சங்கர்லால் மட்டும் உடுமலைக்கு வந்து தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார்.அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் செல்போன் மூலம் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சங்கர்லாலின் மனைவி வினோதா தொடர்ந்து சங்கர் லாலை செல்போனில் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்காததால் அவர்கள் வீட்டின் முன்புறம் குடியிருந்து வரும் கிரிராம் பிரசாத் என்பவரை தொடர்பு கொண்டு தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து கிரிராம் பிரசாத் நீண்ட நேரம் கதவைத் தட்டியும் சங்கர்லால் கதவைத் திறக்கவில்லை.

பிணமாக கிடந்தார்

இதனையடுத்து அவருடைய நண்பர் ராஜாவின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அங்கு குளியலறையில் அலங்கோலமாகக் கிடந்த சங்கர்லாலைப் பார்த்து அதிர்ந்தனர்.உடனடியாக அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

---

சங்கர்லால்


Next Story