நடுவில் கொஞ்சம் ரோட்டை காணோம்


நடுவில் கொஞ்சம் ரோட்டை காணோம்
x

நடுவில் கொஞ்சம் ரோட்டை காணோம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் கோவில்வழி சுற்றுவட்ட சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் அங்கு ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

ரோட்டை காணோம்

திருப்பூர் கோவில்வழி சுற்றுவட்ட சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி கடந்த பல மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் ரோட்டில் தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. இதனால் இங்கு அய்யம்பாளையம் நால்ரோட்டில் இருந்து நீண்ட தூரத்திற்கு ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தற்போது பாதி தார் ரோடாகவும், மீதி மண்சாலை போன்றும் உள்ளதால் நடுவில் கொஞ்சம் ரோட்டை காணோம் என்ற நிலை தான் உள்ளது. இந்த ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். கோவில்வழியில் இருந்து அய்யம்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிக்கு இந்த வழியாக தினமும் அதிக அளவிலான வாகனங்கள் செல்கின்றன.

அடிக்கடி விபத்து

இப்படிப்பட்ட நிலையில் இங்கு ரோடு மேடு, பள்ளமாக இருப்பதால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக இந்த ரோடு ஏற்கனவே குறுகலாக உள்ள நிலையில் தற்போது பாதி ரோடு சேதமடைந்து இருப்பதால் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இவ்வழியாக கனரக வாகனங்களும் அதிக அளவில் செல்வதால் வாகனங்கள் ஒதுங்கி செல்ல இடமின்றி குழியில் இறங்குவதால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்வது மிகவும் ஆபத்தான விஷயமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிப்பதற்கு பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ள ரோட்டிற்கு இனியாவது விடிவு காலம் பிறக்குமா? என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர்.



Related Tags :
Next Story