அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் புதுமண தம்பதிகள் ஏமாற்றம்
அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள், புதுமண தம்பதிகள் ஏமாற்றம்
தாராபுரம்,
தாராபுரத்தில் ஆடிப்பெருக்கு தினமான நேற்று அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் ஏமாற்றமடைந்தனர்.
ஆடிப்பெருக்கு
தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஒருவாரம் பெய்து வந்தது. இதனை தொடர்ந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் இருகரை தொட்டு ஓடியது. அதனால் பொதுமக்கள் மற்றும் புதுமணத்தம்பதிகள் அமராவதி ஆற்றில் புனித நீராடி ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்து ஆடிப் பெருக்கை கழித்து மகிழ்ந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு கடந்த ஒரு மாத காலமாக தென்மேற்கு பருவ காற்று வீசி வருவதும் மாலையில் மேகம் மூட்டம் கூடி மழை பெய்வது போல தோற்றம் ஏற்பட்டு வந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் மழை பொய்த்ததால் அணையிலிருந்து தண்ணீரும் பொதுப்பணித்துறையினர் திறக்கவில்லை. விவசாயம் பொய்த்து போனதால் தங்கள் விளை நிலங்கள் தரிசு நிலமாக மாறியது.
புதுமணத்தம்பதி ஏமாற்றம்
கால் நடைகளுக்கே தீவனம் இன்றி விவசாயிகள் தவித்து வரும் நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையும் பொய்த்தது. அமராவதி அணையில் நீர்மட்டம் சரிந்து போனது. கடந்த சில தினங்களால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்த்தனர். பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் வேளாண் பயிர்கள் விதைப்பதற்கு தென்மேற்கு பருவமழை பெரும் சவாலாக உள்ளது.
எனவே இந்த ஆண்டு பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதியினருக்கு வறண்ட ஆடிப்பெருக்காக காணப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.