உழவர் சந்தையில் சேதம் அடைந்த நடைபாதை
உழவர் சந்தையில் சேதம் அடைந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தளி
உழவர் சந்தையில் சேதம் அடைந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உழவர் சந்தை
உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள், பழங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட், பீன்ஸ், பட்டாணி, மேராக்காய், உருளை மற்றும் சேனைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதால் குறைவான விலையில் நிறைவான தரத்தில் புத்தம் புதிதாக காய்கறிகள் கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
அதற்கு ஏதுவாக கடைகளுக்கு சென்று வருவதற்கு உழவர் சந்தைக்குள் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அது முறையான பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்து விட்டது. அதை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன் வரவில்லை. இதன் காரணமாக மழை பெய்யும் போது ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
கோரிக்கை
மேலும் அடிப்படை வசதியில் ஒன்றான சுகாதார வளாக வசதி கூடுதலாக செய்து தர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதுவும் நிலுவையில் உள்ளது. எனவே உழவர் சந்தையில் பாதை வசதி, சுகாதார வளாக வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-----------------
உழவர் சந்தை