பெண் காவலர்கள் பொன்விழா... 1000 கி.மீ சாதனை பாய்மர படகு பயணம்


பெண் காவலர்கள் பொன்விழா... 1000 கி.மீ சாதனை பாய்மர படகு பயணம்
x

தமிழக பெண் காவலர்கள் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 1000 கி.மீ சாதனை பாய்மர படகு பயணம் 2-வது நாளாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கோடியக்கரை நோக்கி புறப்பட்டது.

சென்னை,

தமிழக காவல் துறையில் பெண் போலீசின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, தமிழக காவல் துறையில் பெண் போலீசின் முதல் காலடிச்சுவடை பதிக்க வைத்தார். இதையொட்டி தமிழ்நாடு பெண் காவலர்கள் பொன் விழா ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பெண் காவலர்களின் 50 ஆண்டு பங்களிப்பை முன்னிட்டு பாய்மர படகு பயணம் தொடங்கப்பட்டது. இந்த பாய்மர படகு பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை துறைமுகம், பழவேற்காடு, கோடியக்கரை வரை 1000 கி.மீ தூரம் கொண்ட பாய்மரப் படகு பயணத்தில் பெண் காவலர்கள் பயணிக்கின்றனர்.

இந்த நிலையில் 1000 கி.மீ சாதனை பாய்மர படகு பயணம் 2-வது நாளாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து இன்று கோடியக்கரை நோக்கி புறப்பட்டது. கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் உரிய பாதுகாப்புகளுடன் 30 பேர் கொண்ட மகளிர் காவல் துறையினர் 4 படகுகளில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

2-வது நாளாக இன்று இந்த சாதனை பாய்மர படகு பயணத்தினை கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி சுந்தர வடிவேல், பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து 4 படகுகளில் மகளிர் காவல்துறையினர் கோடியக்கரை நோக்கி தங்களது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.


Next Story