நாமக்கல் மாவட்டத்தில் பண்ணை குட்டை அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் 30-ந் தேதி கடைசி நாள்


நாமக்கல் மாவட்டத்தில்  பண்ணை குட்டை அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்  30-ந் தேதி கடைசி நாள்
x

நாமக்கல் மாவட்டத்தில் மீன் வளர்ப்பு பண்ணை குட்டை அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் மீன் வளர்ப்பு பண்ணை குட்டை அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பல்நோக்கு பண்ணை குட்டை

தமிழகத்தில் மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 250 முதல் 1,000 சதுர மீட்டர் அளவில் பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பினை மேற்கொள்ள மீன்குஞ்சு, மீன் தீவனம் மற்றும் உரங்கள் ஆகிய உள்ளீட்டு பண்ணை பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் மேற்கொள்ள ஒரு அலகிற்கு ரூ.36 ஆயிரம் செலவாகும்.

அதில் 50 சதவீதம் ஒரு பண்ணை குட்டைக்கு மானியமாக வழங்கப்படும்‌. அதாவது ரூ.16 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

உரிய ஆவணங்கள்

எனவே இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பயனாளிகள் மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். பின்னர் அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story