செங்கல்பட்டில் திடீரென உடைந்த ஏரி கரை - விவசாயிகள் அதிர்ச்சி


செங்கல்பட்டில் திடீரென உடைந்த ஏரி கரை - விவசாயிகள் அதிர்ச்சி
x

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் கிராமத்தில் உள்ள ஏரி கரை உடைந்து நீர் முழுவதும் வெளியேறி வருகிறது.

செங்கல்பட்டு,

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மானாமதி ஏரி, தையூர் ஏரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

இந்த நிலையில் தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் கிராமத்தில் உள்ள ஏரியில் நீர்வரத்து அதிகமானதால் ஏற்கெனவே பழுதாகியிருந்த மதகுகள் இருபுறமும் நீர் வெளியேறியதால் ஏரியின் கரை உடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறி வருகிறது.

இதனால் இந்த ஆண்டு விவசாயம் செய்ய முடியாது என்பதால் உடனடியாக மதகுகளை சீர் செய்து உடனடியாக ஏரிக்கரையை பலப்படுத்தி தரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப்பணித்துறையினர் ஏரிக்கரையை மூட்டை போட்டு அடைப்பதற்கு உண்டான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story