60 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி - பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்

x

ஓமலூர் அருகே 60 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதையடுத்து கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

ஓமலூர்,

ஓமலூர் அருகே 60 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதையடுத்து கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

சேலம் மாவட்டம், ஓமலுர் அருகே உள்ள வேடப்பட்டியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் செட்டேரி அமைந்துள்ளது. தற்போது இப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 60 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த ஏரி நிரம்பியுள்ளது.

ஏரி நிரம்பியதை கொண்டாடும் விதமாக கிராம மக்கள், பட்டாசு வெடித்து, ஏரியில் மலர் தூவி, கிடா வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

1 More update

Next Story