ஓச்சேரி பகுதியில் நிரம்பி வரும் ஏரிகள்


ஓச்சேரி பகுதியில் நிரம்பி வரும் ஏரிகள்
x

ஓச்சேரி பகுதியில் ஏரிகள் நிரம்பி வருகிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வழியத் தொடங்கி, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர தொடங்கி உள்ளது. வாலாஜாவை அடுத்த அணைக்கட்டு பகுதியில் இருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கால்வாய், மேக்கிலியன் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மூன்றாவது பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி, இதன்மூலம் 24 ஏரிகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவேரிப்பாக்கத்தை அடுத்த ஓச்சேரி பஸ் நிறுத்தம் எதிரே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மேக்லியன் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் கால்வாயை கடந்து செல்கின்றனர். எனவே விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story