ஏரிகள் புனரமைப்பு பணி; கலெக்டர் ஆய்வு
ஏரிகள் புனரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அரியலூர்
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் அரியலூர் மாவட்டம் மருதையாறு உப வடிநில பகுதியில் ரூ.9 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருமானூர் ஒன்றியத்தில் சுக்கிரன் ஏரி, தூத்தூர் ஏரிகளை புனரமைத்து நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவைகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் இந்த பணிகளை குறித்த காலத்திற்குள் நடைபெற வேண்டும். குறிப்பாக பருவ மழை தொடங்குவதற்கு முன்பு பணிகளை முடிக்க வேண்டும். பொதுமக்களும், விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story