திருவண்ணாமலையில் பவுா்ணமியொட்டி நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்


திருவண்ணாமலையில் பவுா்ணமியொட்டி நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
x
தினத்தந்தி 30 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 6:46 PM GMT)

திருவண்ணாமலையில் பவுா்ணமியொட்டி நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுா்ணமியொட்டி நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபாடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.58 மணியளவில் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

சாமி தரிசனம்

பவுர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் நீண்ட பொது தரிசனம் வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 முதல் 5 மணி நேரம் ஆனது.மாலை சுமார் 5 மணிக்கு மேல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் வழிபாடு செய்தனர். பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) காலை 8.17 வரை உள்ளதால் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.



Next Story