வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி


வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி

கோயம்புத்தூர்

கோவை

வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

வெளிநாட்டு வேலை

கோவையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். பட்டதாரியான இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ஆன்லைனில் வந்த அறிவிப்பை நம்பி, பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை தொடர்பு கொண்டார். அப்போது அவர், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு கட்டணமாக ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். அதற்கு ரஞ்சித் குமார் ஒத்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து பாலமுருகன் வேலைக்கான ஆர்டரை தயாரித்து அனுப்பி உள்ளார். இதனை நம்பிய ரஞ்சித்குமார், ரூ.6 லட்சத்தை பாலமுருகன் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பி உள்ளார். அதன்பின்னர்தான், வேலைக்கான ஆர்டர் போலியானது என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரஞ்சித்குமார் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ பாண்டியன், தாமரைக்கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பெங்களூருவில் கைது

பாலமுருகன் பெங்களூருவில் இருந்து கொண்டு பலரிடம் இதுபோன்று மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விரைந்து சென்று பாலமுருகனை கைது செய்தனர். என்ஜினீயரிங் படித்து முடித்த இவர், மேலும் பலரிடம் இதுபோன்று லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. கைதாகாமல் இருக்க ஏராளமான போன்களை பாலமுருகன் மாற்றி, மாற்றி பயன்படுத்தி வந்துள்ளார்.

இவரிடம் இருந்து பல செல்போன்கள், 21 சிம்கார்டுகள், விசிட்டிங் கார்டுகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



Next Story