திண்டிவனம்-நகரி ரெயில்பாதைக்கு நிலம் எடுக்கும் பணி விரைவில் முடியும்
திண்டிவனம்-நகரி ரெயில்பாதைக்கு நிலம் எடுக்கும் பணி விரைவில் முடியும் என வருவாய் நிர்வாக ஆணையர் ஆயவுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆரணி
திண்டிவனம்-நகரி ரெயில்பாதைக்கு நிலம் எடுக்கும் பணி விரைவில் முடியும் என வருவாய் நிர்வாக ஆணையர் ஆயவுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் பி.கே.பிரபாகரன் நேற்று வந்தார். ஆரணி தாலுகா அலுவலகத்தில் மேற்கொண்டார். அவருக்கு ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி, ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கணினி மூலம் அலுவலகத்தில் உள்ள நடைமுறை சார்ந்த கணக்கு வழக்குகளை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அரசு சார்பில் செயல்படும் தகவல் மையங்கள், தனியார் தகவல் மையங்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். ஆதிதிராவிடர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளின் மாணவர்களின் விவரங்கள், விடுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட விவரம், வட்ட வழங்கல் பிரிவு சம்பந்தமாக குடும்ப அட்டைகள், புதிதாக டே்டு விண்ணப்பித்தவர்கள் விவரம், அவர்களது மனுக்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆரணி தாலுகாவில் திண்டிவனத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நகரி வரை செல்லக்கூடிய புதிய ெரயில் பாதைக்காக நிலமெடுக்கும் பணி நடைமுறையில் உள்ளது. அப்பணியும் விரைவில் முடிக்கப்படும் என அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து துறை சார்ந்த அலுவலர்களையும் தனித்தனியை அடைத்து குறைபாடுகளையும் கேட்டு அறிந்தார். அப்போது மண்டல துணை தாசில்தாரர்கள் சங்கீதா, திருவேங்கடம், ரவிச்சந்திரன், குமரேசன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அனைத்து பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.