மழை வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
பனப்பாக்கம் அருகே கல்பலாம்பட்டு தரைப்பாலம் மழைவெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெள்ளத்தில் மூழ்கியது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், ஓச்சேரி, வாலாஜா ஆகிய பகுதிகளில் கோடை மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் ஆகியவற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று பனப்பாக்கத்தில் இருந்து பன்னியூர் செல்லும் சாலையில் உள்ள கல்பலாம்பட்டு தரைப்பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் பனப்பாக்கத்தில் இருந்து கல்பலாம்பட்டு, ஆலப்பாக்கம், பன்னியூர் கூட்ரோடு, சிறுவளையம், பெருவளையம், கர்ணாவூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லமுடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
அப்பகுதிகளில ்இருந்து காஞ்சிீபுரம், நெமிலி, பனப்பாக்கத்திற்கு கல்லூரி, வேலை, மருத்துவமனை செல்வதற்கு சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சுற்றிவரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவாக அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.