ெரயில்வே ஊழியரிடம் நில மோசடி; 2 பேர் கைது
சேலம்
மேச்சேரி:-
மேச்சேரி அருகே வாழதாசம்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 55), ரெயில்வே ஊழியர். இவர், தன்னுடைய மகனை வெளிநாட்டில் படிக்க வைக்க நினைத்தார். இதனை அறிந்த திருச்செங்கோட்டை சேர்ந்த சரவணன், சேலத்தை சேர்ந்த முருகன், ஈரோட்டை சேர்ந்த சுப்ரமணி மோகன், சங்ககிரியை சேர்ந்த துரை ஆகிய 5 பேரும் அர்ஜூனனிடம் பேசி ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு ஈடாக 5 ஏக்கர் நிலத்தை கிரயம் செய்து தருவதாகவும் கூறினர். இதற்காக முதல் கட்டமாக ரூ.11 லட்சத்தை அர்ஜூனன் வங்கி கணக்கிற்கு அனுப்பினர். மீதி தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் மேச்சேரி போலீசுார் வழக்குப்பதிவு செய்து சரவணன், பழனிசாமி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Next Story