திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி நிலங்கள் மீட்பு

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி நிலங்கள் மீட்பு
x

சாகுபடி நிலத்தை மனைகளாக மாற்ற முயற்சி நடந்ததை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன.

திருவாரூர்

சாகுபடி நிலத்தை மனைகளாக மாற்ற முயற்சி நடந்ததை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன.

பிறவிமருந்தீஸ்வரர் கோவில்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவிமருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன. இதை தனியார் பலர் வாடகைக்கும், குத்தகைக்கு எடுத்தும் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான சாகுபடி நிலங்களில் சிலர் சாகுபடி செய்யாமல் அதை உருமாற்றி தரிசு நிலமாக்கி பின்னர் மனையாக மாற்ற முயற்சி மேற்கொண்டனர்.

நிலங்கள் மீட்பு

இதையடுத்து கோவில் செயல் அலுவலர் ராஜா, கணக்கர் சீனிவாசன் உள்ளிட்டோர் கோவிலுக்கு சொந்தமான ரூ.11 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள நிலங்களை சம்பந்தப்பட்ட குத்தகைதாரர்களிடம் இருந்து மீட்டு கோவிலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அந்த நிலங்களை அத்துமீறி பயன்படுத்தக்கூடாது என்பதற்காக அங்கு கோவிலின் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Next Story