நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர்
புல உதவியாளர்களை நியமிக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி திருப்பத்தூரில் நில அளவை அலுவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நில அளவை அலுவர்கள் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் முரளிவாணன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் பூவண்ணன், மாவட்ட இணை செயலாளர் திருமால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் சிவகுமார், நில அளவை அலுவர்கள் ஒன்றிப்பு கோட்ட தலைவர் கோ.பனிமலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் ஏகாம்பரம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story