நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்


நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
x

நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

நாகப்பட்டினம்

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நில அளவையர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிதாக உதயமான மாவட்டங்களுக்கு கூடுதல் நில அளவை களப்பணியாளர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 இடங்களில் மண்டல அளவில் உண்ணாவிரத போராட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. திருச்சி மண்டலத்தில் நடக்கும் உண்ணாவிரதப்போராட்டத்தில் நாகை மாவட்டத்தில் இருந்து நில அளவை அலுவலர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story