திருவண்ணாமலை கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் – அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


திருவண்ணாமலை கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் – அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

திருவண்ணாமலை கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அதை மீட்க வலியுறுத்தியும் மணிகண்டன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவில் நிலங்கள் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்கும் வகையில், அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story