17-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு


17-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு
x

வத்தல்மலை சாலையில் 17-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று மண் சரிவால் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வத்தல்மலை

தர்மபுரி

வத்தல்மலை சாலையில் 17-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று மண் சரிவால் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வத்தல்மலை

தர்மபுரி மாவட்டம் வத்தல்மலையில் பெரியூர், வத்தல்மலை பால்சிலம்பு, சின்னங்காடு குளியனூர், ஒன்றியங்காடு உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த மலைகிராமங்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது.

வத்தல்மலை கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்ற பொது மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த மாதம் வத்தல்மலைக்கு அரசு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது.

மண் சரிவு

இதன் காரணமாக நேற்று வத்தல்மலைக்கு செல்லும் சாலையில் 17-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து சாலையில் விழுந்த பாறைகள் மற்றும் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

இது தொடர்பாக மலை கிராமமக்கள் கூறுகையில், மழைக்காலங்களில் மண் சரிவை தடுக்க வத்தல்மலைக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் கற்களை அடுக்கி கான்கிரீட் தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story