குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்பு


குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்பு
x

நாகை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என அனைத்து துறை அலுவலர்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story