மொழிப்போர் தியாகிகள் தினம்: முதல்-அமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில், தமிழ் காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள மணிமண்டபத்தில் இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகிகள் படத்தை பார்வையிட்ட பிறகு, திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சுவாமிநாதன், சென்னை மேயர் பிரியா மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் மொழிப்போர் மற்றும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
Related Tags :
Next Story