முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை


முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
x

விருத்தாசலம் முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் பாலாஜி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா கடந்த 28-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினசரி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அம்மன் வீதிஉலா நடந்தது.

நேற்று முன்தினம் விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதை தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் மண்டபத்தில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து விளக்கு பூஜை தொடங்கியது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிப்பட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) செடல் திருவிழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story