லாரி மோதி 2 வாலிபர்கள் பலி


லாரி மோதி 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 24 May 2022 2:52 AM IST (Updated: 24 May 2022 2:22 PM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள்.

திருச்சி

ஜீயபுரம்,மே.24-

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள எல்லைக்குடி காட்டூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகன் மாதவன் (வயது 23). இவரும், அவரது நண்பருமான பாப்பாக்குறிச்சியை சேர்ந்த மோகன் மகன் சூர்யா (26) என்பவரும் ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலத்தில் நடைபெற்ற திருவிழாவை காண்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நேற்று நள்ளிரவில் முத்தரசநல்லூர் ரெயில்வே கேட் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story