மறைந்த விவசாய சங்க தலைவர்நாராயணசாமி நாயுடு நினைவு நாள் அனுசரிப்பு
கோவில்பட்டியில் மறைந்த விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி பயணியர் விடுதியில் மறைந்த தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி கலந்துகொண்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சங்க மாநில பொருளாளர் சுப்புராஜ், மாவட்ட தலைவர்கள் சவுந்தர பாண்டியன், நடராஜன், தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் சாமிய்யா, அவைத்தலைவர் வெங்கடசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை ெசலுத்தினர்.
Related Tags :
Next Story