மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் இறுதி மரியாதை... 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்...!


மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் இறுதி மரியாதை... 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்...!
x

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

சென்னை,

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.

பின்னர், தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். அவர், இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா தொடங்கி ஏ.ஆர். ரகுமான் வரையிலான பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார். பக்தி பாடல்களையும், தனி ஆல்பங்களையும் அவர் பாடியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு சார்பில் இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வாணி ஜெயராம் உடலுக்கும் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அவரது இறுதி ஊர்வலம் பிற்பகல் 1 மணிக்கு தொடங்க பெசன்ட் நகர் மின் மயானத்தில் நிறைவடைந்தது. அங்கு 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

1 More update

Next Story