தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது - டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற பிறகு சங்கர் ஜிவால் பேட்டி


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது - டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற பிறகு சங்கர் ஜிவால் பேட்டி
x

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்று டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற பிறகு சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி வந்தார். அவர் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார். சங்கர் ஜிவாலிடம் முழு பொறுப்பையும் சைலேந்திரபாபு ஒப்படைத்தார். இதையடுத்து தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக பதவியேற்ற சங்கர் ஜிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலை விபத்துக்களில் மரணங்கள் குறைந்துள்ளது. அதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. காவலர்களின் நலன் கருதி சில திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காவல்துறையை இன்னும் மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்டும்.

சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். கள்ளச்சாராய விற்பனையாளர்கள், ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள்.

இவ்வாறு கூறினார்.


Next Story