சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக முன்னேற்றத்துக்கு துணையாக இருக்க வேண்டும்


சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக முன்னேற்றத்துக்கு துணையாக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 July 2023 1:00 AM IST (Updated: 11 July 2023 3:56 PM IST)
t-max-icont-min-icon

சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக முன்னேற்றத்துக்கு துணையாக இருக்க வேண்டும்

சேலம்

இளைஞர்கள் மத்தியில் சட்டப்படிப்பில் ஆர்வம் அதிகரித்துள்ளது என்று கலெக்டர் கார்மேகம் பெருமிதத்துடன் கூறினார்.

அரசு சட்டக்கல்லூரி

சேலம் சீரகாபாடி அருகே கொம்பாடிபட்டியில் அரசு சட்டக்கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் சேலம் அரசு சட்டக்கல்லூரிக்கான புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த கல்லூரி இளைய தலைமுறையினருக்கு தேவையான சட்ட திறன்கள் மற்றும் அறிவை வழங்கும். மேலும் சட்ட வல்லுனர்களை உருவாக்குவதன் மூலம் சேலம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இந்த கல்லூரி பங்களிக்கிறது.

ஆர்வம் அதிகரித்துள்ளது

இளம் தலைமுறையினருக்கு சட்ட அறிவை வழங்குவதில் உள்ள உறுதிப்பாட்டிற்கு சான்றாக சேலம் சட்டக் கல்லூரி விளங்குகிறது. இளைஞர்கள் மத்தியில் சட்டப்படிப்பில் ஆர்வம் அதிகரித்துள்ளது. சேலத்தில் தரமான சட்ட கல்வி வழங்குவதன் மூலம், ஆர்வமுள்ள மாணவர்கள் சட்டத்தின் மீதான ஆர்வத்தை தொடரவும், சட்ட தொழிலுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் வாய்ப்பை உறுதி செய்கிறது.

இங்கு சட்டம் படிக்கும் மாணவ, மாணவிகள் திறமையான சட்ட வல்லுனர்களாக உருவாகி, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் சட்டக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) துர்காலட்சுமி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி உள்பட பேராசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story