வக்கீலை காரில் கடத்தி நிர்வாண புகைப்படம் எடுத்து பணம் பறிப்பு


வக்கீலை காரில் கடத்தி நிர்வாண புகைப்படம் எடுத்து பணம் பறிப்பு
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரில் கடத்தி சென்று நிர்வாண புகைப்படம் எடுத்து பணம் பறித்ததாக கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல் புகார் அளித்தார்.

கோயம்புத்தூர்

காரில் கடத்தி சென்று நிர்வாண புகைப்படம் எடுத்து பணம் பறித்ததாக கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல் புகார் அளித்தார்.

வக்கீல்

கோவையை சேர்ந்த 61 வயது வக்கீல் ஒருவர் கோவை கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

வக்கீலான நான் பெரிய வணிக நிறுவனங்களுக்கு சட்ட ஆலோச னை வழங்கி வருகிறேன். என்னை ஒரு பெண் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கும்படி கேட்டார். இதனால் அந்த பெண்ணை எனது வீட்டில் உள்ள அலுவலகத்திற்கு வருமாறு கூறினேன்.

சம்பவத்தன்று அந்த பெண்ணின் மகன் என்று கூறி ஒரு நபர் எனக்கு போன் செய்தார். அவர், என்னிடம் பாலசுந்தரம் ரோட்டில் நிற்பதாக கூறியதால் அங்கு சென்று சந்தித்து எனது வீட்டிற்கு வருமாறு அழைத்தேன்.

காரில் கடத்தல்

ஆனால் அவர் எனது அம்மா மாற்றுத்திறனாளி என்பதால் காரில் உள்ளார். எனவே காரில் அமர்ந்து கொண்டு பேசலாம் என்றார். அதை நம்பி நான் வருகிறேன் என்றேன். அப்போது நாங்கள் நின்ற இடத்தின் அருகே ஒரு கார் வந்தது. அதில் இருந்து இறங்கிய நபர்கள் என்னை திடீரென்று காருக்குள் இழுத்து போட்டு் எனது கைகளை கட்டி வாயை பொத்தி கடத்தி சென்றனர்.

அப்போது என்னிடம் இருந்த ரூ.27 ஆயிரத்து 500 பறித்து கொண்டனர். மேலும் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரத்தையும் பறித்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று என்னை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்தனர்.

நிர்வாண புகைப்படம்

இதனால் மது போதையில் மயங்கி விட்டேன். கண் விழித்து பார்த்த போது அவர்கள் எனது ஆடைகளை அகற்றி நிர்வாணமாக புகைப்படம் எடுத்தது தெரியவந்தது. தற்போது அந்த புகைப்படத்தை காண்பித்து என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் தரவில்லை என்றால் சமூக வலைத்தளத்தில் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story