நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க வலியுறுத்திவக்கீல்கள் சாலை மறியல்


நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க வலியுறுத்திவக்கீல்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 July 2023 6:45 PM GMT (Updated: 24 July 2023 6:45 PM GMT)

அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி விழுப்புரம், திண்டிவனத்தில் வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு நேற்று காலை விழுப்புரம் அனைத்து வக்கீல்கள் சங்கம், சமத்துவ வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதிமன்றங்களில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றும் சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தியும், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர்கள் காளிதாஸ், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வக்கீல்கள் ஜெயப்பிரகாஷ், துரைமுருகன், சங்கர், ரமேஷ், பிரபு, தமிழ்மாறன், செந்தில்குமார், பார்த்திபன், சரவணன், அகத்தியன், நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

சாலை மறியல்

அதன் பின்னர் அவர்கள் அனைவரும் காலை 11.30 மணியளவில் நீதிமன்ற வளாகம் எதிரே திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் மற்றும் அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட வக்கீல்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் காலை 11.50 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

திண்டிவனம்

அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தியும், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நேற்று திண்டிவனம் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மூத்த வக்கீல்கள் கிருபாகரன் விஜயன், சக்கரவர்த்தி, பூபால், திலீபன், சேகர், கலா, பொன் ராஜா, முனியாண்டி மற்றும் இளஞ்சேரன் உள்ளிட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து வக்கீல்கள் திடீரென மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்குள்ள விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீசார் விரைந்து வந்து, வக்கீல்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ன், சக்திவேல், ஜெகன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


Next Story