வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு


வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு
x

வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

திருச்சி

திருச்சி வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜேஸ்கண்ணா, இணைச்செயலாளர் ஆரோக்கியதாஸ் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர் சங்கீதாவை கடந்த 3-ந் தேதி அறந்தாங்கியில் உள்ள அவரது வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் 5 பேர் தாக்கியுள்ளனர். தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அறந்தாங்கி போலீசாரை கண்டித்தும், இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் மூத்த வக்கீல் குழுவுடன் ஐ.ஜி. மற்றும் டி.ஐ.ஜி.யை நேரில் சந்தித்து முறையிட வேண்டும். இந்த தாக்குதலை கண்டித்து அறந்தாங்கி போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், சப்-இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது. பழைய கோர்ட்டு கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைக்க ரூ.6 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கிய முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story