வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு


வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
x

வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு கேட்டு கொண்டதற்கு இணங்க கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் நேற்று ஒரு நாள் மட்டும் நீதிமன்றங்களில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக இயற்றிட வேண்டும். வக்கீல் சேமநல நிதியை 10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story