வக்கீல்கள் கோர்ட்டு பணி புறக்கணிப்பு


வக்கீல்கள் கோர்ட்டு பணி புறக்கணிப்பு
x

ஆலங்குடியில் வக்கீல்கள் கோர்ட்டு பணியை புறக்கணித்தனர்.

புதுக்கோட்டை

மத்திய அரசை கண்டித்து ஆலங்குடியில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதற்கு வக்கீல் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். அப்போது, இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பெயர் மாற்றம், திருத்தம் கொண்டு வருவதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட மசோதாவை கண்டித்தும், அதனை உடனே வாபஸ் பெறவும், மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு மேற்கொள்வதை கண்டித்தும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

1 More update

Next Story