போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறையில் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வக்கீல் தமிழன்பன் புகார் தொடர்பாக சென்றுள்ளார். அப்போது மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி வக்கீல் தமிழன்பனை வெளியே தள்ளி அவமானப்படுத்தியதாக அவர் மாயூரம் வக்கீல் சங்கத்தில் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து வக்கீல் சங்கம் சார்பில் 15 வக்கீல்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனாவை நேரில் சந்தித்து புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வக்கீல்களை சந்திக்காததோடு, புகார் மனுவையும் பெறவில்லை என்று குற்றம் சாட்டிய வக்கீல்கள் இதனை கண்டித்து நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மாயூரம் வக்கீல் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வக்கீல் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த 240 வக்கீல்கள் ஈடுபட்டதால் நேற்று நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது. போலீசாருக்கு எதிராக வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story