வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கோர்ட்டுகளில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களை மட்டுமே வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கரின் படத்தை கோர்ட்டுகளில் இருந்து அகற்றக்கோரி அனுப்பப்பட்ட ஐகோர்ட்டு சுற்றறிக்கையை கண்டித்து மயிலாடுதுறையில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை வக்கீல் சங்க தலைவர் வேலுகுபேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாயூரம் வக்கீல் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வக்கீல் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


Next Story