வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாமரைக்குளம்:
அரியலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு நுழைவு வாயில் முன்பாக அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் கொண்டுவர சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மேலும் மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிப்பை மேற்கொள்வதை கண்டித்தும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும், நாளை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாவும் வக்கீல்கள் தெரிவித்தனர். கோர்ட்டிற்கு செல்லும்போது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கருப்பு பட்டை அணிந்து செல்ல இருப்பதாகவும், மத்திய அரசு அந்த சட்ட மசோதாவை வாபஸ் பெறவில்லை என்றால் போராட்டங்கள் தீவிரமடையும் என்றும் தெரிவித்தனர்.