வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை
அனைத்து சட்டத்தின் பெயர்களையும் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தி மொழிகளில் சட்டத்தின் பெயர்களை மாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து மசோதாக்களையும் மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டுமென கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு மற்றும் புதுவை வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் பாபு, ராணிப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நித்தியானந்தம், செயலாளர் ஜான் சாலமன் ராஜூ உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து ெகாண்டனர்.
Related Tags :
Next Story